அம்மா செய்த காரியம்.. குடும்பத்தால் மன வேதனையை அனுபவித்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்..

By Karthick Raja Jul 29, 2026 05:00 AM GMT
Report

பாக்யஸ்ரீ போர்ஸ்

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அம்மா செய்த காரியம்.. குடும்பத்தால் மன வேதனையை அனுபவித்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.. | Bhagyashri Borse Faced Severe Family Opposition

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் என்ட்ரி தந்தார். தனது முதல் தமிழ் படத்திலேயே நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

6வது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவா?

6வது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவா?

எதிர்ப்புகளை சந்தித்த நடிகை

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் நடிக்கப்போவதாக குடும்பத்தில் சொன்னபோது, பல எதிர்ப்புகளை சந்தித்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியவராவது: "நான் நடிக்க போவதாக சொன்னதும் என் குடும்பத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என் தாயிடம் பேசினேன், முடியாது என்றார். தந்தையிடம் கேட்டால், அம்மா வேண்டாம் என்கிறாளே என்றார். என் சகோதரியாவது ஆதரவு தருவாள் என்று நினைத்தால், அவளும் வேண்டாம் என்றாள். அனைவரும் எனக்கு எதிராகவே இருந்தனர்".

அம்மா செய்த காரியம்.. குடும்பத்தால் மன வேதனையை அனுபவித்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.. | Bhagyashri Borse Faced Severe Family Opposition

"ஆனால், என் கணவரை நான் கைவிட விரும்பவில்லை. அப்போது என் அம்மா என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்துவிட்டார். சுமார் ஆறு மாதங்கள் என்னிடம் பேசவே இல்லை. என் அம்மா என்னை ஒரு நாள் நிச்சயம் பெருமையாக நினைப்பார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டுமே முன்னோக்கி நகர்ந்தேன்" என பாக்யஸ்ரீ போர்ஸ் கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US