அவமானப்படுத்தப்பட்ட பாக்யஸ்ரீ போர்ஸ்.. உருக்கமாக பேசிய நடிகை
பாக்யஸ்ரீ போர்ஸ்
பாக்யஸ்ரீ போர்ஸ் ஆந்திரா கிங் தாலுகா, கிங்டம், காந்தா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்தான் லெனின். இப்படத்தில் நடிகர் அகிலுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்திருந்தார்.

லெனின் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் சேயோன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சிறு வயதில் சந்தித்த மறக்க முடியாத கசப்பான அனுபவம் குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். மறக்க முடியாத அனுபவம்
அவர் கூறியதாவது:
"நைஜீரியாவில் பள்ளியில் படித்தபோது எனக்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியாது. அதனால் அங்கிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் என்னை கேலி செய்து அவமானப்படுத்தினர். அந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன".

"அந்த வழியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து தொடர்ந்து முயற்சி செய்தேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அந்த அனுபவங்கள்தான் முக்கிய காரணம்" என கூறியுள்ளார்.