விஜய் டிவியின் புதிய சீரியல்.. களமிறங்கும் புதிய நடிகை.. யார் தெரியுமா?
மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறும் தொலைக்காட்சியில் விஜய் டிவியும் ஒன்று. சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

புதிய சீரியல்
இந்த நிலையில், புத்தம் புதிய சீரியல் விரைவில் விஜய் டிவியில் வரவுள்ளது. இந்த சீரியலில் கன்னட சீரியல் நடிகை சைத்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

நடிகை சைத்ரா
நடிகை சைத்ரா கன்னடத்தில் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பாகி வரும் பானுமதி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். கன்னடத்தில் எப்படி பானுமதி சீரியல் மூலம் வரவேற்பை பெற்றாரோ அதே போல் இந்த புதிய சீரியல் மூலம் தமிழிலும் வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலின் தலைப்பு மற்றும் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.