பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோவை கலாய்த்து துள்ளும் நெட்டிசன்கள், என்ன காரணம் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் மற்ற தொலைக்காட்சியின் சீரியகளுக்கும் பாரதி கண்ணம்மா தொடர் TRP-யில் டப் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் புதிய ப்ரோமோ நேற்று வெளியாகி இருந்தது.
அதில் தனது மகளை கண்டுபிடித்த கண்ணம்மாவை நான்கு அடியாட்கள் சேர்ந்து அடிப்பது போலவும், அதனை தடுக்க சுற்றி இருந்து பெண்கள் அவர்களிடம் சண்டைபோடுவது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பின்னணியில் பிகில் படத்தில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலும் போடப்பட்டுள்ளது. தற்போது இதை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமான மீம்ஸ்களை போட்டு தள்ளி வருகின்றனர்.