பரத் பட ஷூட்டிங்கில் திடீர் தாக்குதல்: படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகர் பரத் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும் தற்போது அவருக்கு குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கிறது. தற்போது அவர் ஆக்ஷன் 22 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
தாய்லாந்தில் சில வருடங்களுக்கு முன் மாணவர்கள் ஒரு குகையில் சிக்கிக்கொண்டு, அதன் பின் பல நாட்கள் மீட்பு பணிகள் நடந்த பிறகு தான் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த சம்பவத்தை வைத்து தான் ஆக்ஷன் 22 படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உண்மை சமபவம் நடந்த குகையிலேயே இந்த படத்தின் ஷூட்டிங்கையும் நடத்த முடிவெடுத்த படக்குழுவினர் அங்கு சென்று அரசு அனுமதி உடன் ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர்.
ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் வந்து ரகளை செய்து பணம் கொடுத்தால் தான் ஷூட்டிங் நடத்த விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். பணம் கொடுத்தபிறகும் அவர்கள் கார்களை சேதப்படுத்தி கல் எரித்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இனி ஷூட்டிங் அங்கு நடத்தாமல் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் முடிவெடுத்து இருக்கிறாராம்.

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
