'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் இல்லை.. இவர்தான்
தனுஷ்
தனுஷ் எல்லா தரப்பையும் கவரும் வகையில் படங்கள் நடிக்க கூடியவர். அவர் தேர்வு செய்து நடித்த கதைகள் அவரது கெரியர் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது.
அப்படி அவர் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இடையே படம் முழுக்க நடக்கும் மோதல், அதோடு காமெடிக்கு கொடுக்கப்பட்டு இருந்த முக்கியத்துவம் ரசிகர்களை கவர்ந்தது.

முதலில் நடிக்க இருந்தது இவர்தான்..
இந்நிலையில் தற்போது நடிகர் பரத் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இந்த படத்தின் கதை தன்னிடம் தான் முதலில் வந்தது என கூறி இருக்கிறார்.
"ஆனால் அந்த நேரத்தில் அந்த கதை எனக்கு பிடிக்காமல் போய்விட்டது, அதனால் அதில் நடிக்கவில்லை. அதற்குப்பின் தனுஷ் நடித்து பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது" என பரத் கூறி இருக்கிறார்.

திருமணத்திற்கு தயாராகும் ஹன்சிகா.. ஆனால் இப்போது இப்படி ஒரு சிக்கலா