விஜய்யுடன் நடிப்பது என்னுடைய ஆசை.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஓபன் டாக்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
விஜய்யுடன் நடிப்பது ஆசை.
விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை கண்மனி.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் எனும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை கண்மணி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் 'விஜய்யுடன் நடிப்பது என்னுடைய ஆசை மற்றும் கனவு' என்று கூறியுள்ளார்.