மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பாரதியின் தந்தை.. அதிர்ச்சியளிக்கும் திருப்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியல்
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் எப்போது தான், ஒன்றாக மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வாராம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் பாரதி தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது தனது மருமகளை பார்க்கவேண்டும் என்று அவர் கேட்கிறார்.
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து வந்தவுடன், தனது கடைசி ஆசை நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் என்று கூறுகிறார். இதனால், கண்ணம்மா மற்றும் பாரதி இணைவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.