இனி பாரதியின் கண்ணம்மாவாக இவர் தான்.. வெளிவந்த விறுவிறுப்பான அழகிய ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.
மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவினால், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்துள்ளது.
உதாரணமாக இந்த சீரியலில் நடித்து வந்த அகிலன் மற்றும் ஃபரினா இருவரும் வெளியேறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து கதாநாயகி கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் விலகியுள்ளார் என்று தெரியவந்தது.
இதனால், இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியானது.
அதனை உறுதி செய்யும் வகையில் இனி பாரதியின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்கவுள்ளார் என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..