கண்ணம்மாவுக்கு தெரிய வரும் உண்மை.. மாமியார் மீது கடும் கோபத்தில் கண்ணம்மா
மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இதில் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரண்டு குழந்தை இல்லை ஒரு குழந்தை தான் என்று போய் சொல்லி, கண்ணம்மாவிடம் இருந்து அந்த உண்மையை, அவரது மாமியார் மறைத்துவிட்டார்.
கண்ணம்மாவும் அதை நம்பி, தனக்கு பிறந்த ஒரு குழந்தையை வளர்த்து வர, மற்றொரு புறம் இரண்டாவது குழந்தையை தனது மகள் என அறியாமல் பாரதி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தாக வரவிருக்கும் எபிசோடில், உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும், கண்ணம்மாவிடம், உனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்று மருத்துவர் கூறி விடுகிறார்.
இதனால், கடும் கோபமடைந்த கண்ணம்மா, தனது மாமியாரிடம் 'எனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற விஷயத்தை, ஏன் என்னிடம் கூறாமல் மறைத்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்.
இதோ அந்த வீடியோ..