பிரபல நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற பாரதி கண்ணம்மா சீரியல் ஜோடி.. அதுவும் இதற்காக தானா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய, முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதை அனைவரும் அறிவோம்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.
இந்த சீரியலில் இரண்டாம் கதாநாயகி, கதாநாயகனாக, கண்மணி மற்றும் அகிலன் நடித்து வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இவ்விருவருக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கண்மணி மற்றும் அகிலன் இணைந்து ஜோடியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடமாடியுள்ளனர்.
அப்போது சூப்பர் சிங்கர் செட்டில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..