பாரதி கண்ணம்மா சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பில் ரோஷினி.. கேக் வெட்டி கொண்டாடிய நடிகர், நடிகைகள்
விஜய் டிவியின் TRP உச்சத்திற்கு செல்ல முக்கியமான காரணமாக இருந்த சீரியல், பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோஷினி, தீடீரென்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
அதனை உறுதி செய்யும் விதமாக, புதிய கதாநாயகி, கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்துள்ள புதிய ப்ரோமோவும் வெளியானது.
படங்களில் நடிக்கும் வாய்ப்பை நடிகை ரோஷினி பெற்றதன் காரணமாகவே, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை, தன்னுடைய சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ரோஷினி.
இந்த வீடியோ தற்போது கண்ணம்மாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#RoshiniPriyan Last Day In The Sets Of #Barathiakannamma pic.twitter.com/gGffGvb8RY
— chettyrajubhai (@chettyrajubhai) November 14, 2021