சமந்தா போல் நடித்து அசத்திய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. அழகிய வீடியோ
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது சின்னத்திரையில் முன்னணியில் உள்ளது.
இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் பல ரசிகர்கள் மனதை தனது நடிப்பினால் கவர்ந்து வருகிறார்கள்.
அதிலும், தனது கியூட்டான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா. இவர் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் மகளாக நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோஹினி சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான நடிகை லிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், தெறி படத்தில் விஜய்யை பற்றி நடிகை சமந்தா பேசும் வசனத்தை அப்படியே டப் செய்து பேசி, அசத்தியுள்ளார் லிஷா.
இதோ அந்த வீடியோ..