பாரதி கண்ணம்மா ரோஷினி இடத்தில் இனி இவர் தான் நடிக்க போறாரா? வெளிவந்த புகைப்படம்!
தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா.
இதில் பாரதி என்னும் கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் என்பவரும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியனும் நடித்துவந்திருந்த நிலையில் ரோஷினி அத்தொடரில் இருந்து விலகுவதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
அதற்கு காரணம் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் தான் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் ரோஷினி இடத்தில் நடிக்கப்போகும் மற்றோரு சின்னத்திரை நடிகையின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அபி டைலர்ஸ், யாரடி நீ மோஹினி போன்ற தொடர்களில் நடித்த நக்ஷத்ரா இத்தொடரில் கண்ணம்மாவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு கூடுதலாக டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி பெயரும் கண்ணம்மா ரோலில் நடிக்கவுள்ளதாக அடிப்படுகின்றது, இதில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.