பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் Mr & Mrs சின்னத்திரை பிரபலம்- யாரு தெரியுமா?
பாரதி கண்ணம்மா 2
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு சூப்பராக 2019ம் வருடம் முதல் ஒளிபரப்பாகி வந்தது. இடையில் கொஞ்சம் கதையில் சொதப்ப ரசிகர்கள் சீரியலை நிறுத்துங்கள் என புலம்பி வந்தார்கள்.
இந்த நிலையில் தான் ஒருவழியாக சீரியலை முடித்தார்கள், இப்போது பாரதி கண்ணம்மா 2வது சீசன் தொடங்கியுள்ளது.
நேற்று முதல் எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கிறது, தொடரின் புரொமோவில் சிப்பு மற்றும் வினுஷா இருவரையும் பாரதி மற்றும் கண்ணம்மாவாக காட்டினார்கள்.
வேறொரு நாயகி
ஆனால் வினுஷா சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க கண்ணம்மா வேடத்தில் பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா நடிக்கிறாராம். இவர் விஜய் தொலைக்காட்சியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டிருந்தார்.
இவர் தான் தொடரில் கண்ணம்மாவாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அவரது காட்சிகளை காண ஆர்வமாக உள்ளனர்.
விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
