கேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி
சீரியலோ, படமோ நெகட்டீவ் வேடத்தில் நடிப்பவர்களுக்கு எப்போதுமோ மோசமான கமெண்ட் வரும். அதனை பலரும் சமாளிப்பார்கள், சிலர் ரசிகர்களின் மோசமான செயல்களை எதிர்க்கொள்ள முடியாமல் தவிப்பர்.
அப்படி பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் பல மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறார் பரீனா. அண்மையில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.
ஒருசிலர் இந்த நேரத்தில் சீரியல் நடிக்காமல் ஓய்வு எடுங்கள் என பதிவு செய்து வருகின்றனர்.
பரீனா கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் மருதாணியில் வரைந்து போட்டோ ஷுட் நடத்தினார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் இவ்வளவு மோசமான புகைப்படம் எல்லாம் தேவையா என கமெண்ட் செய்தனர்.
அதற்கு பரீனா உடலமைப்பை அசிங்கமாக பார்ப்பது நீங்கள்தான் என பதிலடி கொடுத்துள்ளார்.