முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா- விஜய் டிவியில் புது சீரியலில் வரப்போகும் அருண், படப்பிடிப்பு தள போட்டோ
பாரதி கண்ணம்மா
2019ம் ஆண்டு புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்ட விஜய் டிவி தொடர் பாரதி கண்ணம்மா. 1000 எபிசோடுகளை தொடர் எட்டிய நிலையில் இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது.
இந்த தொடர் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் அருண் பிரசாத், இவர் தொடர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நடித்து முடித்துள்ளார்.
இடையில் சமூக வலைதளங்களில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்திருந்தார்.
புதிய தொடர்
இந்த நேரத்தில் தான் அருண் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர் பாரதி கண்ணம்மா தொடரில் அடிப்பட்ட தலையில் கட் போட்டிருந்தாரே அந்த லுக்கில் இருக்கிறார்.
ஈரமான ரோஜாவே நடிகர்களுடன் புகைப்படம் எடுத்ததால் இந்த தொடரில் அவர் வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். சிலர் பாரதி கண்ணம்மா இறுதிகட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
நடிகை தேவயானியின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்