பாரதி வீட்டிற்கு வந்து அதிரடி சவால்விட்ட கண்ணம்மா- பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த கதைக்களம்
கடந்த வாரம் முழுவதும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
காரணம் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டு இருவரும் சேர்ந்து அகில்-அஞ்சலி குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த காரியங்களை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் வாரத்தின் இறுதியின் பாரதி ஒரு டுவிஸ்ட் வைக்க வழக்கம் போல் கதை பழைய நிலைமைக்கே சென்றுவிட்டது.
தற்போது தொடரின் புதிய புரொமோ வந்துள்ளது, அதில் கண்ணம்மா பாரதியின் உடை என அவரது பொருட்களை அவரின் வீட்டிற்கு வந்து கொடுக்கிறார்.
பின் சௌந்தர்யா இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதா என கேட்க அதற்கு கண்ணம்மா யார் முடிந்தது என்று சொன்னது. கூடிய விரைவில் நான் சுத்தமானவள், எனது குழந்தைக்கு அப்பா இவர்தான் என்பதை நிரூபிப்பேன் என கூறிவிட்டு செல்கிறார்.
இதோ அவர் சவால் விட்ட புரொமோ,