விவாகரத்தை எதிர்ப்பார்த்த பாரதி, அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்- சந்தோஷத்தில் கண்ணம்மா, செம புரொமோ
பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து கடந்த சில நாட்களாகவே நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடரின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா வேடம் மாற்றப்பட்டுள்ளது.
ரோஷினிக்கு பதிலாக வினுஷா என்பவர் புதிய கண்ணம்மாவாக நடிக்க வந்துள்ளார். அவரை மக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்க ஆரம்பித்துள்ளார்கள். அவரும் தன்னால் முடிந்த நடிப்பை வெளிக்காட்டி கதாபாத்திரத்துடன் ஒன்றி வருகிறார்.
அவர் நடிக்க ஆரம்பித்த போதே நீதிமன்ற காட்சிகள் வந்தன. கதையில் பாரதி கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் கேஸ் போட அந்த காட்சிகள் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்தனை நாள் விசாரணை காட்சிகளுக்கு பிறகு நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்க முடியாது என தீர்ப்பு வழங்குகிறார்கள். அதோடு இருவரும் 6 மாத காலம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்க அந்த பரபரப்பான சூப்பர் புரொமோ வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,