மகள்களுடன் ஒரே வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும்- ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்த அடுத்தக்காட்சி போட்டோ
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அடுத்தடுத்து பரபரப்பை கொடுக்கும் வகையில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.
ஒரே ஒரு DNA டெஸ்ட் அது எடுத்தால் சீரியலே முடிந்துவிடும், அதை வைத்து நிறைய மாதங்களாக கதையை ஓட்டிக்கொண்டு வருகிறார் இயக்குனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆசை தான், இருவரும் சேர வேண்டும். அழகான குடும்பமாக அவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை, தற்போது ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ளனர். அந்த எபிசோடுகளே பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தனது 2 மகள்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
இதோ அந்த புகைப்படம்,