பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?- வெண்பாவிடம் கெஞ்சும் கண்ணம்மா, அதிரடி காட்சிகள், படப்பிடிப்பு தள வீடியோ
பாரதி கண்ணம்மா இப்போது உள்ள சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடராக இருக்கிறது. வில்லிக்கு சாதகமாக ஒரு காட்சி, நாயகிக்கு சாதகமாக ஒரு காட்சி என சீரியல் கதைக்களத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் இயக்குனர்.
கடந்த வாரம் சீரியல் ஒரு சுவாரஸ்யமான டுவிஸ்ட்டுடன் முடிந்தது, இந்த வாரம் சீரியலில் பெரிதாக மறைக்கப்பட்ட ஒரு விஷயம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்குள் இயக்குனர் அதை வெளிக்கொண்டு வருவார் என்று நம்ப முடியாது.
தற்போது சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கண்ணம்மா, வெண்பாவிடம் ஏதோ ஒரு விஷயத்திற்காக கெஞ்சுவது போல் தெரிகிறது.
வெண்பா, கண்ணம்மாவிடம் உனது 2வது குழந்தை யார் என்று தனக்கு தெரியும், யார் என சொல்ல வேண்டும் என்றால் விவாகரத்தில் கையெழுத்து போட வேண்டும் என கூறுகிறார்.
உடனே கண்ணம்மா குழந்தை பாசத்தில் கையெழுத்து போட முடிவு செய்ய கடைசியில் சௌந்தர்யாவே வந்து அந்த உண்மையை கூறி விடுவாராம். அடுத்து இந்த அதிரடி காட்சிகள் தான் வரப்போவதாக கூறப்படுகிறது.