சீரியலில் பாரதியால் கர்ப்பமான வெண்பா- பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த பரபரப்பான டுவிஸ்ட்
பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வெண்பா வேடம் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் கதை ஓடிக் கொண்டிருக்கும் போது இடையில் ஏதாவது செய்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
அப்படி தற்போது அவரால் ஒரு பரபரப்பான டுவிஸ்ட் வரப்போவதாக தெரிகிறது. தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாபாத்திரம் பாரதியின் DNA Sample வைத்து கர்ப்பமாகி விடுகிறார்.
இதற்கு இடையில் தன்னையும் கண்ணம்மாவையும் பிரித்தது வெண்பா தான் என்ற உண்மையை அறிந்த பாரதி அவரிடம் சண்டை போக செல்ல அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுவது போல் காட்சிகள் அமைந்துள்ளனவாம்.
எனவே தமிழிலும் விரைவில் அப்படி ஒரு கதைக்களம் வர இருக்கிறது என்கின்றனர்.
நிஜத்தில் வெண்பா வேடத்தில் நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.