பொது இடத்தில் அசிங்கப்பட்ட கண்ணம்மா, லட்சுமிக்கு அவர் கொடுத்த ஷாக்- பரபரப்பான புரொமோ
பாரதி கண்ணம்மா ஒரே ஒரு விஷயத்தை பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்.
வில்லிக்கு தெரியாமல் DNA டெஸ்ட் எடுத்தால் சீரியலே முடிந்துவிடும், அதை செய்ய விடாமல் இயக்குனர் ஏதேதோ கதைகளை உருவாக்கி தொடரை ஓட்டிக்கொண்டு வருகிறார்.
இந்த வாரத்திற்கான புரொமோ வந்துள்ளது, அதில் கண்ணம்மா ஆட்டோகாரரின் தங்கை திருமணத்திற்கான பெண் பார்க்கும் விசேஷத்தில் கலந்துகொள்கிறார்.
அங்கு அவரை கணவரை பிரிந்து வாழும் ஒருவர் இதை செய்ய கூடாது என வந்தவர்கள் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த, அவரோ இன்னும் இரண்டு நாட்களில் எனது பிறந்தநாள். எனது கணவர் யார் என்பதை கூறுவேன் என அதிரடியாக கூறுகிறார்.
இந்த பரபரப்பு புரொமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன ஆகுமோ என இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.