பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகருக்கு திடீரென திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
பாரதி கண்ணம்மா விறுவிறுப்பின் உச்சத்தில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வருடம் பிரிந்து வாழ்ந்துள்ள பாரதி-கண்ணம்மா இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றம் செல்ல அவர்களை 6 மாதம் ஒன்றாக இருக்க கோர்ட் உத்தரவிட்டது.
அதனால் இருவரும் ஒன்றாக வசிக்கும் காட்சிகள் தான் இனி ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை வந்த காட்சிகள் எலலாமே ரசிக்கும் வண்ணம் இருந்தது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்த சீரியலில் கண்ணம்மாவை கொலை செய்ய வந்த வில்லனாக நடித்துவந்த பிரவீன் இப்போது நல்லவராக மாறி வெண்பாவுக்கு பல எதிர்ப்புகளை காட்டி வந்தார்.
கடந்த சில மாதங்களாக அவரது காட்சிகள் காட்டப்படவில்லை.
இந்த நிலையில் நடிகர் பிரவீனுக்கு நிஜத்தில் திருமணம் நடந்துள்ளது. அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அந்த புகைப்படத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவினர் அனைவரும் உள்ளனர்.