ரோஷினிக்கு முன்பே பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கவிருந்த முன்னணி நடிகை.. வாய்ப்பை தவறவிட்ட பரிதாபம்
விஜய் டிவியின் TRP உச்சத்திற்கு செல்ல முக்கியமான காரணமாக இருந்த சீரியல், பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறிய பின், கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவர் புதிதாக நடிக்க வந்தார்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக முதன் முதலில் நடிப்பதாக இருந்தது, நடிகை ரோஷினி இல்லையாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரேஷ்மா தானாம்.
ரேஷ்மாவிடம் இந்த கேரக்டரில் நடிக்க அணுகிய பொழுது அவர் மறுத்துவிட்டார் என்று கூறுகின்றனர்.
அவர் மட்டுமின்றி பல நடிகைகள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri