கடும் சோகத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்- இப்படியா நடக்கனும், வருந்தும் ரசிகர்கள்
2019ம் ஆண்டு விஜய்யில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் தொடருக்கு சரியான வரவேற்பு இல்லை என்றாலும் ஒரே ஒரு நாயகியின் காட்சி படு வைரலாக சீரியலும் ஹிட்டானது.
அதில் இருந்து TRPயிலும் நம்பர் 1 இடம் எல்லாம் பிடித்தது பாரதி கண்ணம்மா. இடையில் ரோஷினி சீரியலில் இருந்து திடீரென வெளியேற வினுஷா என்பவர் அவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்போது டிஆர்பி கொஞ்சம் பின்தங்கி உள்ளது என்று தான் கூற வேண்டும்.
முதலில் அகிலன் வேடத்தில் நடித்தவர் மாறினார், அடுத்து கண்ணம்மா, இப்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துவந்த கண்மணியும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனை நடிகை உறுதிப்படுத்த தற்போது இந்த தொடர் இயக்குனர் சோகத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அய்யய்யோ எத்தனை பேர் மாற்றம், முடியவில்லை என பதிவு போட ரசிகர்களும் ஏன் இப்படி மாறுகிறார்கள் என தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.