படப்பிடிப்பில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தைகள் செய்த அட்டகாசம்- செம கியூட்டான வீடியோ
பாரதி மற்றும் கண்ணம்மா சீரியலில் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் பலர் ஏங்கி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஏகப்பட்ட தமிழ் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது பாரதி கண்ணம்மா சீரியல்.
இந்த சீரியல் இயக்குனர் பாரதி-கண்ணம்மா இணைந்தால் சீரியலே முடிந்துவிடும் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார். சீரியலை முடிக்கும் ஐடியா இல்லை என்பது போல் கதையில் எதை எதையோ காண்பித்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் மக்களே கதை இல்லை என்றால் முடித்துவிட்டு போகலாம் இல்லையா, ஏன் இப்படி இழுக்க வேண்டும் என கமெண்ட் செய்கின்றனர்.
இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் சீரியலில் நடிக்கும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் குட்டி நடனம் போடுகின்றனர்.
அவர்களின் அந்த கியூட் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.