பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் உண்மை பெயர், கதை மற்றும் சில விவரங்கள்
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த தொடர் 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி தொடங்கப்பட்டது.
பின் இடையில் நாயகி ரோஷினி சீரியலில் இருந்து வெளியேற வினுஷா நடித்து வந்தார். இந்த தொடர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கருத்தமுத்து என்ற தொடரின் ரீமேக் ஆகும்.
4 வருடம் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் பிப்ரவரி 6, 2023ம் ஆண்டு முடிந்தது.
நடிகர்கள்
- அருண் பிரசாத்- டாக்டர் பாரதி
- ரோஷினி, வினுஷா தேவி- கண்ணம்மா
- ரூபா ஸ்ரீ- சௌந்தர்யா
- ரிஷிகேசவ்- வேணு கோபாலகிருஷ்ணன்
- கண்மணி மனோகரன்- அஞ்சலி
- சுகேஷ் ராஜேந்திரன்- அகிலன்
- ஃபரினா ஆசாத்- டாக்டர் வெண்பா
- செந்தில் குமாரி- பாக்கியலட்சுமி
- வெங்கடேஷ்- சண்முகம்
- ரக்ஷா ஷ்யாம்- சௌந்தர்ய லட்சுமி
- லிஷா ராஜ்குமார்- ஹேமா
சீரியலின் கதை
கருப்பு நிறத்தில் கலையாக நல்ல எண்ணம் கொண்ட கண்ணம்மாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறார் டாக்டர் பாரதி. குடும்பத்தை எதிர்த்து கண்ணம்மாவை திருமணம் செய்யும் பாரதி நன்றாக சந்தோஷமாக தான் வாழ்கிறார்.
ஆனால் இடையில் வெண்பா என்ற பாரதியின் தோழி என்ட்ரீ கொடுத்து அவர்களின் வாழ்க்கையை சுக்கு நூறாக உடைக்கிறார். பின் கதையில் என்னென்ன நடந்தது எல்லாம் மக்களுக்கு அத்துபடி தான்.
தொடர் முடிவுக்கு வருவதற்குள் நிறைய நடிகர்கள் மாற்றம் எல்லாம் நடந்தது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
