பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரவீன் பென்னட் இயக்கும் இத்தொடர் Karuthamuthu என்ற மலையாள தொடரின் ரீமேக்.
வெண்பா பட்ட கஷ்டம்
இந்த தொடர் முழுக்க முழுக்க வில்லியின் தந்திர வேலையால் தான் இத்தனை வருடங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. இவர் நிஜத்தில் கர்ப்பமாக இருக்க அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது.
கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து சீரியல் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது சீரியலில் வந்த காட்சிகளால் பரீனா ரசிகர்களால் அதிகம் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகினார்.
அவர் மட்டும் இல்லாமல் அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் பலர் திட்டினார்கள் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேக்கப் இல்லா புகைப்படம்
பரீனா நடிப்பதில் எப்படி அதிகம் பிஸியாக இருக்கிறாரோ அதேபோல் இன்ஸ்டா பக்கத்திலும் எப்போது மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
அண்மையில் இவர் வெள்ளை உடையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் சூப்பராக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி- செம அழகு