பாரதி முன்பே வெண்பாவிற்கு ஏற்படும் சோதனை, குஷியில் கண்ணம்மா- பாரதி கண்ணம்மா சீரியலின் அதிரடி புரொமோ
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களில் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு TRPயில் தமிழகத்தில் முதல் இடத்தில் எல்லாம் இருந்தது.
ஆனால் இப்போது நாயகி மாற்றத்திற்கு பிறகு கதைக்களத்தில் கொஞ்சம் டல் அடிக்க சீரியலின் பார்வையாளர்கள் குறைந்த வண்ணம் உள்ளனர். முதல் இடத்தில் இருந்து இப்போது 5,6 இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய கதைக்களம்
இப்போது தொடரில் மீண்டும் பாரதி மற்றும் கண்ணம்மா தினமும் சந்திக்க வைக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. பாரதி தனது அம்மாவின் நண்பர் மருத்துவமனையில் முக்கிய மருத்துவராக இருக்க அதில் பணியாற்றுகிறார் கண்ணம்மா.
இனி எப்படி கதைக்களம் செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிரடி புரொமோ
இப்போது சீரியலின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெண்பா கரு கலைப்பு விஷயத்திற்கு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார், அவரை மீண்டும் கைது செய்ய உத்தரவு வந்துள்ளது என போலீசார் பாரதி முன்பு அவரை கைது செய்கிறார்கள்.
வெண்பா தனது அம்மாவிடம் உதவி கேட்க அப்போது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என கல்யாணத்திற்கு ஒரு கண்டிஷன் போடுகிறார்.
நடிகையாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா.. எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் தெரியுமா