பாரதி கண்ணம்மா தொடரில் வந்த புதிய நபர், அவர் வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்- கடுப்பில் வில்லி
பாரதி கண்ணம்மா ஒரே ஒரு திருப்பு முனையை வைத்து பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். ஒரே ஒரு DNA டெஸ்ட் மொத்த ஜோலியும் முடிந்துவிடும் ஆனால் அதை மட்டும் செய்ய மறுக்கிறார் இயக்குனர்.
அடுத்து வரப்போவது
இந்த வாரத்திற்கான பாரதி கண்ணம்மா சீரியலின் புரொமோ இன்னும் வரவில்லை, எனவே ரசிகர்களுக்கு இந்த வார முழுவதும் என்ன கதை என்ற ஒரு குழு கூட தெரியவில்லை.
ஆனால் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போவது பற்றி தெரிய வந்துள்ளது.
வெண்பாவிற்கு ஜோசியம் பார்க்க ஒரு புதியவர் வருகிறார். அவர், இந்த ஜாதகருக்கு நினைச்ச காரியம் நடக்கப் போகுது. கல்யாண கலைக்கூடி வந்துடுச்சு என சொல்ல சாந்தி அப்போ அம்மா அவங்க ஆசைப்படுற பாரதியை கல்யாணம் பண்ணிப்பாங்களா என கேட்கிறார்.
பாரதியோ சாரதியோ அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இவங்க விரும்பாத கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பே கிடையாது.
இவர்களே விரும்பி ஏற்றுக்கிற ஒரு ஆள்தான் வரப்போறாரு என சொல்கிறார். ராகு கேது பெயர்ச்சியால் இவங்க வாழ்க்கையே மாறப் போகுது.
இது வரைக்கும் எல்லாரையும் ஆட்டி வெச்ச இவங்கள இனி எல்லோரும் ஆட்டி வைப்பாங்க. வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறும் என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வெண்பா ஜோசியரை செமயாக திட்டி வெளியே அனுப்புகிறார்.