வாவ் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி- இதை எதிர்ப்பார்க்கவில்லையே?
பாரதி கண்ணம்மா
மலையாளத்தில் ஒளிபரப்பாகி வந்த கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் படு ஹிட்டாக தான் ஓடியது.
கண்ணம்மா பையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்ததில் இருந்து சீரியல் செம ஹிட். அதன்பின் கதைக்களமும் சூடு பிடிக்க ரசிகர்களும் அதிகம் தொடருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
இடையில் நாயகி மாற்றம் பின் சில கதாபாத்திர மாற்றங்கள் என நடக்க சீரியலும் டல் அடிக்க ஆரம்பித்தது. அதோடு கதைக்களத்திலும் ஒரேஒரு விஷயத்தை வைத்தே ஓட்டினார்கள், இது ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை தந்தது என்றே கூறலாம்.
சிலர் அட போதும் தான் இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றெல்லாம் ரசிகர்கள் புலம்பினார்கள், இந்த தொடர் புரொமோக்களின் கமெண்டுகளை பார்த்தால் தெரியும் இப்போதும் ரசிகர்கள் முடித்துவிடுங்கள் என புலம்பி வருகிறார்கள்.
சூப்பர் செய்தி
இத்தனை நாட்கள் தொடரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என புலம்பிய ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி வந்துவிட்டது. அதாவது விரைவில் தொடர் முடிவுக்கு வருகிறதாம். தற்போது பாரதி கண்ணம்மா 2ம் பாகத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.