கண்ணம்மா என் மனைவி தான் என கூறிய பாரதி- அதிர்ந்து போன வெண்பா, செம சீன்
விஜய்யில் பாரதி கண்ணம்மா சீரியல் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலில் நாயகன்-நாயகி சேர்ந்துவிட்டால் கதையே முடிந்துவிட்டது.
ஆனால் கதை முடிய கூடாது என்பதில் இயக்குனர் கவனமாக இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவர்களுக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி எதிரும்-புதிருமாக வைத்து வருகிறார் இயக்குனர்.
தற்போது ஹேமாவால் கண்ணம்மா-பாரதி இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். கதையில் அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் இன்று வெண்பா, பாரதியை பார்த்து சில கேள்விகளை கேட்கிறார். அதைக்கேட்ட பாரதி கோபத்தில் கண்ணம்மா என் மனைவி தான், நான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருக்கும் வரை என் மனைவி தான்.
அதில் உனக்கு என்ன பிரச்சனை என வெண்பாவை பார்த்து கேட்கும் செம காட்சி இன்று இருக்கிறதாம்.