'எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள்..யாருக்கு பயந்து படம் பண்ண வேண்டும்..' இயக்குனர் பாரதிராஜா அதிரடி!
நடிகர்கள் சூர்யா,மணிகண்டன்,லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த 2-ம் தேதி வெளியான படம் ஜெய் பீம்.
நேரடியாக OTT-யில் வெளியான இந்த படத்தை T.G.ஞானவேல் இயக்கியிருந்தார், சூரியா ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து நாடு முழுவதும் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவது போல காட்சிகள் இருக்கிறது என்றுக்கூறி அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இழப்பீடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் நடிகர் சூர்யாவிற்கும் படக்குழுவினருக்கு கெடு விதித்திருந்தது வன்னியர் சங்கம்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக இந்திய அளவில் உள்ள அவரின் ரசிகர்கள் WeStandWithSuriya என்ற ஹாஷ்டேகை ட்ரெண்டிங் செய்தனர். தற்போது சூர்யாவிற்கு ஆதவராக இயக்குனர் பாரதிராஜாவும் குரலெழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாசிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் பாரதிராஜா 'எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள்..யாருக்கு பயந்து படம் பண்ண வேண்டும் என தெரியவில்லை' என கேள்வி எழுப்பியுள்ளார்.