30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே இருந்த பாரதிராஜா பட நடிகர் மரணமடைந்தார்.. மிகவும் உருக்கமான பதிவு
பாரதிராஜா
இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கூட கருமேகங்கள் கலைக்கின்றன படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தனது மகன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது நண்பன் பாபு மறைவு குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் வெற்றி!..சம்பளத்தை தாண்டி ரஜினி, அனிருத், நெல்சனுக்கு பல கோடி கொடுத்த கலாநிதி மாறன்..எவ்ளோ தெரியுமா?
பாபு மரணம் குறித்து பதிவு
இந்த பதிவில் "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து றைந்த 'என் உயிர் தோழன் பாபு' வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்." என பதிவு செய்துள்ளார்.
திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த பாபு பாரதிராஜாவின் என் உயிர் தோழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஸ்டண்ட் விபத்தினால் முதுகு எலும்பு உடைந்து படுத்தப்படுகையில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
திரைத்துறையில்
— Bharathiraja (@offBharathiraja) September 19, 2023
மிகப்பெரும் நட்சத்திரமாக
வந்திருக்கவேண்டியவன்
படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
வாழ்ந்து மறைந்த
" என் உயிர் தோழன் பாபு " வின்
மறைவு மிகுந்த மனவேதனை
அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ANwRUthJbd