மனோஜ் இறப்பிற்கு பிறகு பாரதிராஜா அதற்கு அடிமையாகிவிட்டார்.. பிரபலம் எமோஷ்னல்
மனோஜ்
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த மக்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
இவரது வாழ்க்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு சோகமான விஷயம் நடந்தது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
நந்தனா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்த மனோஜிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போதைய நிலை
தனது மகன் இறப்பிற்கு பிறகு பாரதிராஜா மனதளவில் மிகவும் உடைந்துவிட்டார். தற்போது அவரது நிலை குறித்து பாரதிராஜாவின் சகோதரர் சில விஷயங்கள் கூறியுள்ளார்.
அதில் அவர், பாரதிராஜாவை மனோஜ் மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டார், ஆனால் அவர் போன பிறகு அந்த இடத்தில் இருந்து யார் அவரை பார்த்துக்கொள்வார் என்பது கேள்விக்குறிதான். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்.
மனோஜ் குழந்தைகள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார், நேற்று கூட காலையில் இருந்து சாப்பிடவில்லை.
குழந்தைகள் சாப்பாட்டை ஊட்டி விட்டதும் சாப்பிட்டார், இப்போது பாரதிராஜா அவர்களுக்கு அடிமையாகியிருக்கிறார் என கூறியுள்ளார்.