சினிமாவில் இருந்து இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்?- பாவனா ஓபன் டாக்
பாவனா
நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தவர்.
விறுவிறுப்பாக எல்லா மொழிகளிலும் தரமான படங்கள் கமிட்டாகி நடித்து வந்தவர் அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடந்தது, அது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இப்போது அதைப்பற்றி பேச அவசியம் இல்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா படங்களில் நடிக்கவில்லை, மாறாக தனது காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
தற்போது தான் போட்டோ ஷுட், படங்கள் என பணிபுரிய தொடங்கியுள்ளார்.
நடிகையின் பேட்டி
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தது, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பினார்கள், சிலருடன் இணைத்தும் பேசினார்கள்.
ஒருகட்டத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன்.
தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

கேரவனில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது - விஜய்யை மோசமாக சாடிய பிரபலம்! IBC Tamilnadu
