5 வருடங்களுக்கு பின் பாலியல் சீண்டல் பற்றி பாவனாவின் அறிக்கை! குவியும் ஆதரவு
நடிகை பாவனா மேனன் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு படத்தின் ஷூட்டிங் சென்று திரும்பியபோது கடத்தப்பட்டு சீண்டலுக்கு ஆளானதாக வந்த செய்தி சினிமா துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அது பற்றி நடிகை பாவனா தற்போது ஐந்து வருடங்கள் கழித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "நான் தவறு செய்யவில்லை என்றாலும் என்னை தான் அவமானப்படுத்த, பேசவிடாமல் செய்ய, தனிமைப்படுத்த பார்கிறார்கள்" என அவர் கூறி உள்ளார்.
அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது..
"இது எனக்கு எளிதான பயணமாக இருக்கவில்லை. ஒரு victim ஆக இருந்து சர்வைவர் ஆக மாறிய பயணம் தான் இது. என் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கருத்தில் கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக என் பெயர், என் அடையாளம் வெளியிடாமல் வைத்திருந்தார்கள்."
"நான் இந்த குற்றத்தை செய்யவில்லை, ஆனாலும் என்னை அவமானப்படுத்த பலமுறை முயற்சிகள் நடந்திருக்கிறது. அந்த நேரங்களில் எல்லாம் எனக்காக பேச யாரவது ஒருவர் இருந்திருக்கிறார்கள். தற்போது பல குரல்கள் எனக்காக இருக்கிறது என நினைத்தால் இந்த போராட்டத்தில் நான் தனியாக இல்லை என தெரிகிறது".
"நீதி நிலைநாட்ட, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க, வேறு யாருக்கும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க, நான் இந்த போராட்டத்தை தொடர்கிறேன். எனக்கு ஆதரவு தருபவர்களுக்கு நன்றி" என பாவனா தெரிவித்து உள்ளார்.
பாவனாவின் அறிக்கையை பார்த்து அவருக்கு சினிமா துறை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri