பாவனா ராமண்ணா
1996ம் ஆண்டு தலு மொழியில் வெளிவந்த மாரிபலா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா ராமண்ணா. இதன்பின் 1999-ம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.மேலும் இந்தி, கன்னட மொழியில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
கர்ப்பமான நடிகை
40 வயதாகும் நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை பாவனா பதிவிட்டுள்ளது, " புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இதை சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இங்கு நான் இரட்டை குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நன்றியால் நிரம்பி வழிகிறேன். எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. நாள், எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன" என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.