குற்றவாளி என் டிரைவர் இல்லை, பொய் பரப்பாதீங்க.. நடிகை பாவனா நீதிமன்ற தீர்ப்பு பற்றி கோபமான அறிக்கை
நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுதலை செய்து இருந்தது.
மேலும் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் 20 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அரசு தரப்பு தெரிவித்து இருக்கிறது.

பாவனா பதிவு
இந்நிலையில் நடிகை பாவனா இது பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
"இந்த வழக்கில் முதல் குற்றவாளி எனது பர்சனல் டிரைவர் என செய்தி பரப்புகிறார்கள், அது உண்மை அல்ல. அவர் என் டிரைவர் இல்லை, அவர் என்னிடம் வேலை செய்யவில்லை, அது முற்றலும் பொய். அவர் எனக்கு தெரிந்தவர் அல்ல."
"2016ல் ஒரு படத்தில் நான் நடித்தபோது அவரை டிரைவர் ஆக போட்டிருந்தார்கள். அவரை ஒன்றிரண்டு முறை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். அதன் பின் அந்த குற்ற சம்பவம் நடந்த நாள் அன்று தான் பார்த்தேன். தயவு செய்து பொய் கதைகளை பரப்பாதீங்க."
"இந்த தீர்ப்பு பலருக்கும் ஆச்சர்யம் ஆக இருக்கும். ஆனால் எனக்கு ஆச்சர்யம் இல்லை. 2020ல் இருந்தே எனக்கு இது சரியாக தெரியவில்லை. இந்த நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகிவிட்டேன். நீதிபதியை மாற்ற சொன்ன மனு நிராகரிக்கப்பட்டது."
மெமரி கார்டு
"இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான மெமரி கார்டு நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும்போது அதை மூன்று முறை சட்ட விரோதமாக எடுத்திருக்கிறார்கள். வழக்கில் இருந்து இரண்டு அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தார்கள்."
"நான் முறையான விசாரணை வேண்டினால், குற்றவாளியோ அதே நீதிபதி தான் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். அப்போதே எனக்கு பெரிய சந்தேகம் வந்தது."
”குடியரசு தலைவர், பிரதமர் என பலரிடமும் கோரிக்கை வைத்தேன். விசாரணையை ஓபன் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும், மீடியா மற்றும் மக்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினேன். அதுவும் நிராகரிக்கப்பட்டது.”
இப்படி பாவனா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri