பூமிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா.. குடும்ப புகைப்படம் வைரல்

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
நடிகை பூமிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
பூமிகா
சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் பூமிகா. சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் 'முன்பே வா' பாடல் தற்போதும் அதிகம் பேரால் ரசிக்கப்படும் ஒன்று.
பூமிகா தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் தான் அதிகமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிட் ஆன சீதா ராமம் படத்தில் பூமிகா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூமிகாவின் மகன் போட்டோ
பூமிகா 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவரது யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு 2014ல் மகன் யாஷ் பிறந்தார்.
தற்போது மகனுக்கு 8 வயதாகும் நிலையில் பூமிகா தன் குடும்ப போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பூமிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என பலரும் ஆச்சர்யம் அடைத்து இருக்கிறார்கள்.



viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
