ஷூட்டிங்கில் தீப்பற்றிய பூமிகாவின் சேலை! மிகப்பெரிய படவாய்ப்பை இழந்துவிட்டேன்..
பூமிகா
நடிகை பூமிகா தமிழில் சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ஹிந்தி படங்களில் அதிகம் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது சல்மான் கானின் Kisi Ka Bhai Kisi Ki Jaan படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பூமிகா அளித்த பேட்டியில் தான் இழந்த பட வாய்ப்புகள் பற்றி பேசி இருக்கிறார்.
ஷூட்டிங்கில் தீப்பற்றிய சேலை..
"ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன். அதற்காக போட்டோஷூட் முதலில் நடத்தப்பட்டது. அப்போது துரதிஷ்டவசமாக என் கையில் இருந்த விளக்கு கீழே விழுந்த என் சேலை தீப்பற்றிக்கொண்டது. பல வருடங்கள் ஆகிவிட்டாலும் அந்த சம்பவம் எனக்கு தற்போதும் நினைவில் இருக்கிறது" என பூமிகா கூறி இருக்கிறார்.
பூமிகாவுக்கு பதில் தீபிகா படுகோன் அதன்பின் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
தலைகீழாக நடிகை ஜோதிகாவின் வெறித்தனமான ஒர்கவுட்.. வைரல் வீடியோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
