பிரபல நடிகர் மாதவனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை பூமிகா... ஏன் தெரியுமா?
பூமிகா
டெல்லியில் பிறந்த நடிகை பூமிகா கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை பூமிகா சாவ்லா.
கடந்த 2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் தயாரான பத்ரி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின் ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம், சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் என அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்தன.
தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் நடிகை பூமிகா ஒரு பேட்டியில், பிரபல நடிகர் மாதவனுடன் ஒரு படம் நடிக்க மறுத்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், மாதவனுடன் கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அப்போது அம்மா கதாபாத்திரங்கள் தனக்குப் பொருந்தாது என தான் எண்ணியதால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
