பெற்றோர் பேச்சை கேட்காமல் நடிகருக்கு மூன்றாம் மனைவியான சச்சின் பட நடிகை!
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு விவாகரத்து மறுமணம் எல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணம். சமீபத்தில் கூட சமந்தா - நாக சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா போன்ற பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
சரி விஷயத்துக்கு வருவோம். பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தான் கரண் சிங் குரோவருக்கு மூன்றாம் மனைவி ஆனது பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தவர் தான் அவர்.
கரண் சிங் க்ரோவர் முதல் இரண்டு திருமணமும் ஒரு சில வருடங்களிலேயே விவகாரத்தில் முடிந்தது என்பதால் பிபாஷாவின் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் பிபாஷா அதற்கு முன் நடிகர் ஜான் ஆப்ரஹாம் உடன் 9 வருடமாக காதலில் இருந்தார். அந்த காதலே பிரேக்கப் ஆகிவிட்டது, கரண் திருமணம் விவகாரத்தானது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை என சொல்லி பிபாஷா திருமணம் செய்திருக்கிறார்.