சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்... ஒரு லிஸ்ட் இதோ
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே முதலில் நியாபகம் வரும் தொலைக்காட்சி சன் டிவி.
இதில் விதவிதமான கதைக்களத்துடன் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது.
இப்போது இந்த தொலைக்காட்சியில் டாப் சீரியல்கள் என்றால் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள், அன்னம் போன்ற தொடர்கள் தான். வாரா வாரம் வரும் டிஆர்பியில் சன் டிவி தொடர்கள் தான் டாப் 5ல் இடம்பெறுகின்றன.

தற்போது நாம் சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் உருவாகி ஒளிபரப்பான டாப் தொடர்களின் விவரத்தை காண்போம்.
அதிக பட்ஜெட்
நந்தினி
சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது நந்தினி தொடர். 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது மீண்டும் சன் டிவியில் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.
வாணி ராணி
கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது வாணி ராணி தொடர். சுமார் 1700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்த தொடர் அதிக பட்ஜெட்டில் தயாரான தொடர்களில் 2ம் இடத்தில் உள்ளது.

வானத்தை போல
3வது லிஸ்டில் இருக்கும் ஒரு தொடர் வானத்தை போல. அண்ணன்-தங்கை செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
தெய்வ மகள்
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சன் டிவி தொடர்களின் லிஸ்டில் 4வது இடத்தில் உள்ளது தெய்வ மகள் தொடர். வாணி போஜன் மற்றும் கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது தெய்வமகள் சீரியல்.

வள்ளி
இந்த சீரியல் 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மதிய நேரம் ஒளிபரப்பாகி வந்தது. சுமார் 1960 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடர் அதிக பட்ஜெட் லிஸ்டில் 5வது இடத்தில் உள்ளது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri