பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் பாண்டியன் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
பொய் சொல்லி திருமணம் செய்தது தவறு, ஆனால் அதை ஒப்புக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்துகொண்டே செல்கிறது மயில் குடும்பம்.
பொய் சொல்லி ஏமாற்றியதால் பாண்டியன் குடும்பம் மயிலை வெளியே அனுப்பினார்கள், அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்காமல் உடனே அடுத்த பிரச்சனையை தொடங்கிவிட்டனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம்
வரதட்சணை கொடுமை, அடித்து துன்புறுத்துவது போன்ற பல பொய்களை அடுக்கிக்கொண்டே சென்றனர். இப்போது கோமதி அண்ணன்கள் வாக்குமூலத்தால் வெளியே வந்துவிட்டனர். அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது, பாண்டியன் என்ன செய்யப்போகிறார் என்ற நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது.

சோகமான செய்தி
இந்த நிலையில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் வீட்டில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது நடிகர் ஸ்டாலினின் அம்மா உயிரிழந்துள்ளாராம்.
செய்தி அறிந்ததும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் பதிவு போட்டு வருகின்றனர்.