வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் விஜய்! படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் அறிவிப்பு வாரிசு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது.
விஜய்யின் 68-வது திரைப்படம்
இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் விஜய் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி புஷ்பா உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த Mythri Movie Makers விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக தகவல் பரவி வருகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?