கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு! Unexpected
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமானது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.
இதில் நாம் பழக்கப்பட்ட கொஞ்சம் அதிரடியான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டைகள் தான் அதிகம். சிலரின் குரல்கள் தான் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன், ஆனால் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நமக்கு கிடைக்கும் தகவல்படி நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் தொகுத்து வழங்கினால் நன்றாக தான் இருக்கும், ஆனால் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.