பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?
பிக்பாஸ் 10
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மக்கள் எதிர்ப்பார்க்காத விஷயங்கள் பல நடக்கிறது. Leader Exit Poll என்ற ஒன்றை வைத்து ஒருவரை வெளியேற்றி பின் திடீரென அவர 2 பேருடன் என்ட்ரி கொடுக்கிறார்.
50 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியில் ஒருவர் வந்தார். தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை வேறு புதிய என்ட்ரி வர இருக்கிறதாம், அதற்கான புரொமோக்கள் எல்லாம் ஏற்கெனவே வந்துவிட்டது.

குமரன்
பிக்பாஸ் 10வது சீசனில் ரசிகர்கள் இவர் கண்டிப்பாக பைனல் வருவார் என கணித்தது குமரனை தான். ஆனால் அவர் திடீரென செய்துள்ள விஷயம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது அவர் ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டார், அதற்கு காரணம் அவரது அப்பா தானாம்.
அவர் உடல்நிலை சரியில்லாதவராம், அதிகம் மறதி உள்ளதாம். அவருக்கு ஏதாவது ஆனால் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது என கதறி அழுது அவர் இந்த விஷயத்தை கூற அனைவரும் அழுகிறார்கள்.
இதோ அந்த புரொமோ,