பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 10
பிக்பாஸ் 10, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று. ஆரம்பித்த நாள் முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இப்போது 10வது சீசன் வரை வந்துள்ளது.

ஆனால் கடந்த 3 சீசன்களாக விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார், 10வது சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடந்த வார எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதிக்கு தொண்டை வலி பிரச்சனை இருப்பதால் கடந்த எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தனது கம்பீரமான பேச்சால் போட்டியாளர்களை தெறிக்கவிட்டார் என்றே கூறலாம்.
அவர் மொத்தமாக நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் சூப்பர் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

சம்பளம்
படங்களில் நடிக்க பல லட்சம் சம்பளம் பெறும் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் 10 தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ. 15 லட்சம் என இரண்டு எபிசோடுகளை நடத்த அவர் ரூ. 30 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.